"வெளி நாட்டு விடுமுறை அங்கீகரிப்பிற்கான நிகழ் நிலை நிகழ்ச்சித் திட்டம்"

விடுமுறை விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலம் பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு வெளிநாட்டு விடுமுறை அங்கீகாரம் பாரம்பரிய முறையில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த அமைப்பு உற்பத்தித்திறன் மிக்கதல்ல, இது சம்பந்தமாக எடுக்கப்பட்ட சரியான கால அளவைக் குறிப்பிடுவது சாத்தியமில்லை. எனவே, இந்த செயல்முறையை மிகவும் திறமையாகவும் பயனுள்ளதாகவும் மாற்றுவதற்காக, கல்வி அமைச்சானது நிகழ் நிலையில் வெளிநாட்டு விடுமுறையிற்கு விண்ணப்பிக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், இந்த முறைமையின் பயன்பாடு குறித்து தொடர்புடைய பல்கலைக்கழகங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதன்படி, அந்த திட்டத்தின் கீழ், கொழும்பு பல்கலைக்கழகம், பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம், கட்புல மற்றும் கலை நிகழ்த்துகை பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம், திறந்த பல்கலைக்கழகம், மொரட்டுவ பல்கலைக்கழகம் மற்றும் ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்கள் நிறைவடைந்துள்ளன. பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம், காட்சி மற்றும் கலை நிகழ்த்துகை பல்கலைக்கழகம் ஆகியவற்றின் விடுமுறை விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் மற்றும் இந்த நிகழ் நிலை மூலம் விடுமுறை அங்கீகாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே விழிப்புணர்வு திட்டங்களை பூர்த்தி செய் த பல்கலைக்கழகங்கள் டிசம்பர் 1 முதல் இந்த நிகழ் நிலை முறைமை மூலம் வெளிநாட்டு விடுமுறை அங்கீகார செயல்முறையை செயல்படுத்த திட்டமிட்டுள்ளன. இந்த திட்டம் குறித்து பிற பல்கலைக்கழகங்களுக்கும் எதிர்காலத்தில் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. .

/news/vapa

 

செய்தி நிகழ்வுகள்