site map 1

 

English (UK)SinhalaSriLanka

Degree Programmes

வெளிநாட்டு மாணவர்களுக்கான பட்டப் பாடநெறிகள்

 

பட்டப் பாடநெறிகள்
இப்போது பதிவிறக்கம்
கற்கை நெறிகளுக்கான முன்கோரிக்கை பாடம்
இப்போது பதிவிறக்கம்
பாடக் குறியீடு
இப்போது பதிவிறக்கம்
பட்ட பாடநெறிகளை வழங்குகின்ற பல்கலைக்கழகங்கள், நிறுவனங்களின் முகவரிகள்
இப்போது பதிவிறக்கம்



வெளிநாட்டு தகைமையுள்ள மாணவர்களின் அனுமதிக்கான ஆகக் குறைந்த தேவைப்பாடுகள்

 

வெளிநாட்டு தகைமையுள்ள மாணவர்களின் அனுமதிக்கான ஆகக் குறைந்த தேவைப்பாடுகள்
இப்போது பதிவிறக்கம்



கல்வியாண்டு

பழைய முறையை பின்பற்றுகின்ற பல்கலைக்கழகங்களின் கல்வியாண்டு மூன்று தவணைகளை உள்ளடக்கி உள்ளது. அரையாண்டு வகுப்பு முறைமையை பின்பற்றுகின்ற பல்கலைக்கழகங்கள் வருடத்திற்கு இரண்டு அரையாண்டு வகுப்புகளை கொண்டுள்ளன. குறிப்பிட்ட கல்வி ஆண்டின் முதலாவது தவணை/ அரையாண்டு வகுப்பு ஆரம்பிக்கும் திகதியானது கல்வி நிறுவகத்திற்கு கல்வி நிறுவகம் அல்லது ஒரு நிறுவனத்தின் பீடத்திற்கு பீடம் வேறுபடலாம். எவ்வாறாயினும் எந்தவொரு மாணவரும் கல்வி ஆண்டின் முதலாவது தவணையின் ஆரம்பத்தை தவிர பின்னர் அனுமதிக்கப்பட மாட்டார். 2012 செப்டெம்பர்/ஒக்டோபர் மாதங்களிலிருந்து அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பொதுவாக ஒரு கல்வி ஆண்டை கொண்டிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதன் பிரகாரம் குறிப்பிட்ட கல்வி ஆண்டானது ஒக்டோபரிலிருந்து அடுத்த ஆண்டு செப்டெம்பர் வரை இருக்கும்.



எவ்வாறு விண்ணப்பிப்பது?

அனுமதிக்காக ஒவ்வொரு விண்ணப்பமும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவிடமிருந்து பெறத்தக்க உரிய விண்ணப்பப் படிவத்தில் செய்யப்படல் வேண்டும்.


 அ) இலங்கையில் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதியை நாடுகின்ற இலங்கை இராஜதந்திரிகளின் பிள்ளைகள் தமது விண்ணப்பங்களை செயலாளர், வெளிவிவகார அமைச்சு, குடியரசு கட்டிடம், கொழும்பு 01, இலங்கை ஊடாக கொழும்பு 07, உவாட் இடம், இல 20, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் மேலதிக செயலாளருக்கு (கல்வி விவகார மற்றும் பல்கலைக்கழக அனுமதிகள்) சமர்ப்பித்தல் வேண்டும்.


ஆ) இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு அனுமதியை நாடுகின்ற வெளிநாட்டு மாணவர்கள், விண்ணப்பதாரிகள் நாட்டின் வெளிவிவகார அமைச்சின் ஊடாக  செயலாளர், வெளிவிவகார அமைச்சு, குடியரசு  கட்டிடம், கொழும்பு 01, இலங்கை ஊடாக கொழும்பு 07, உவாட் இடம், இல 20, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் மேலதிக செயலாளருக்கு (கல்வி விவகார மற்றும் பல்கலைக்கழக அனுமதிகளை) சமர்ப்பித்தல் வேண்டும்.


இ) வெளிநாட்டு தகைமையுள்ள இலங்கை மாணவர்கள் கொழும்பு 07, உவாட் இடம், இல 20, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் மேலதிக செயலாளருக்கு (கல்வி விவகார மற்றும் பல்கலைக்கழக அனுமதிகள்) நேரடியாக தமது விண்ணப்பங்களை அனுப்புதல் வேண்டும்.


ஈ) விண்ணப்ப செயற்படுத்தல் கட்டமைப்பு, பல்கலைக்கழக் மானிய ஆணைக்குழுவுக்கு செலுத்தக்கூடிய 10 அ.டொ. வங்கி வரைவுடன் இணைத்து ஒவ்வொரு விண்ணப்பமும் அனுப்பப்படல் வேண்டும். விண்ணப்ப செயன்முறை கட்டணத்தை கொண்டிராத விண்ணப்பங்கள் அனுமதிக்காக கவனத்திற் கொள்ளப்பட மாட்டாது.


உ) இலங்கையில் பல்கலைக்கழக அனுமதியை நாடுகின்ற அனைத்து பாகிஸ்தானிய பிரஜைகளும் இஸ்லாமாபாத், பாகிஸ்தானிய அரசாங்கத்தின் கல்வி அமைச்சின் இணக்கப்பாட்டை பெற்று தமது விண்ணப்பங்களுடன் “ஆட்சேபனை அற்ற சான்றிதழ்களின்” மூலப் பிரதியை இணைத்து அனுப்புதல் வேண்டும்.


ஊ) பொருத்தமான அனைத்து ஆதரவு ஆவணங்களையும் தனது விண்ணப்பம் கொண்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துவது விண்ணப்பதாரரின் பொறுப்பாகும். உரிய அதிகாரிகளினால் அனைத்து ஆவணங்களிலும் சான்றுபடுத்தப்பட வேண்டும்.


எ) அனுமதிக்கான ஒவ்வொரு விண்ணப்பமும், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் மேலதிக செயலாளர் (கல்வி விவகார மற்றும் பல்கலைக்கழக அனுமதிகள்) உத்தேச அனுமதித் திகதிக்கு ஆகக் குறைந்தது மூன்று மாதங்களுக்கு முன்னர் கிடைக்கப் பெறுதல் வேண்டும்.


ஏ) விண்ணப்பத்துடன் பொருத்தமான ஆவணங்களையும் சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க தவறுகின்றமை, வெளிநாட்டு கோட்டாவின் கீழான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பத்தின் நிராகரிப்புக்கு காரணமாக அமையலாம்.
ஐ) 2011/2012 ஆம் கல்வி ஆண்டுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி 2012 மே 15ஆம் திகதியாகும்.

ஏற்றுக் கொள்ளல்

விண்ணப்பம் கிடைக்கப்பெற்றவுடன் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் விண்ணப்பத்தின் பெறுகை பற்றி விண்ணப்பதாரிக்கு அறிவிக்கப்படும். ஏற்றுக் கொள்ளல் அட்டை,பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு வெறுமனே விண்ணப்பத்தை கிடைக்கப்பெற்றுள்ளது என்பதையே சுட்டிக்காட்டுவதுடன் அது விண்ணப்பம் செயற்படுத்தப்படுகின்றது என்பதை அர்த்தப்படுத்தாது.

தெரிவும் இடங்களை வழங்குதலும்

இந்த வகுதிக்கான மாணவர்களின் ஒதுக்கப்பட்ட இடங்களின் எண்ணிக்கை மிகவும் வரையறுக்கப்பட்டதாக இருப்பதோடு தற்போது இது ஒவ்வொரு கற்கை நெறியிலும் காணப்படுகின்ற மொத்த எண்ணிக்கையின் 0.5% ஆக மட்டுமே உள்ளது. வெளிநாட்டு தகைமையுள்ள விண்ணப்பதாரிகளின் தெரிவானது பின்வரும் முன்னுரிமை ஒழுங்கின் அடிப்படையில் அமைந்ததாக உள்ளது.


அ) ஏனைய நாடுகளில் தங்கியிருக்கின்ற இலங்கை இராஜதந்திரிகளின் பிள்ளைகள்


ஆ) இலங்கையில் பணிபுரிகின்ற வெளிநாட்டு இராஜதந்திரிகளின் பிள்ளைகள்


இ) சுய நிதியீட்டத்தின் அடிப்படையில் அனுமதியை நாடுகின்ற சார்க் நாடுகளிலிருந்தான விண்ணப்பதாரிகள்


ஈ) மேலே (அ) வின் கீழ் உள்ளடக்கப்பட்ட இலங்கை விண்ணப்பதாரிகள்


உ) மேலே (ஆ) அல்லது (இ) இல் உள்ளடக்கப்படாத ஏனைய வெளிநாட்டு விண்ணப்பதாரிகள்


ஒவ்வொரு கற்கை நெறியிலும் உத்தேச உள்வாங்கலாக 4.5 வீதம் வரை வெளிநாட்டு மாணவர்களுக்கும் கட்டண அறவீட்டு அடிப்படையில் தகைமைகளை வெளிநாடுகளில் பெற்றுக் கொண்ட இலங்கை மாணவர்களுக்கும் ஒதுக்கப்படும். அதன் வண்ணம், இலங்கையின் க.பொ.தா. (உ/த) பரீட்சைக்கு சமமான வெளிநாட்டு தகைமைகளை கொண்ட விண்ணப்பதாரிகள் விண்ணப்பதற்கு தகுதியுடையவர்களாவர்.


 தெரிவு இறுதிப்படுத்தப்பட்டவுடன் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் வெற்றிகரமான பரீட்சார்த்திகளுக்கு அது குறித்து அறிவிக்கப்படும். அத்தகைய விண்ணப்பதாரிகள் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட உதவிப் பதிவாளர்/உதவிப் பதிவாளர் (மாணவர் பதிவு) உசாவுத்தலுடன் கூடிய விரைவில் அவர்களுக்கு குறித்துரைக்கப்படவுள்ள பல்கலைக்கழகங்களில் அவர்களை பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்துகொள்ளல் வேண்டும்.


இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசாங்கம் ஒரு சுற்றுலா வீசாவை, மாணவர் வீசாவாக மாற்றாது என்பதை அனைத்து வெளிநாட்டு மாணவர்களும் கவனத்திற் கொள்ளல் வேண்டும். ஆதலால் பல்கலைக்கழகமொன்றுக்கு அனுமதியை பெற விரும்புகின்ற எந்தவொரு நபரும் நாட்டினுள் சுற்றுப்பயண வீசாவில் நுழைதல் கூடாது. அவர்களை முன்னதாகவே வீசாக்களை பெற ஏற்பாடுகளை செய்து கொள்ளல் வேண்டும்.

விண்ணப்பங்கள்

 

2011/2012 கல்வி ஆண்டுக்காக இலங்கை பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு தகைமைகளுடன் கொண்ட மாணவர்களின் அனுமதிக்கான விண்ணப்பப் படிவம்

இப்போது பதிவிறக்கம்



பாடநெறிக் கட்டணம்

 

வெளிநாட்டு மாணவர்களுக்கான பாடநெறிக் கட்டணம்
இப்போது பதிவிறக்கம்
இப்போது பார்வையிட

மிகப் புதிய செய்திகள்

  • 1
  • 2
State Secretary Assumed Duties Today Mrs. Jayanthi Wijethunga assumed duties on...
மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு - 2016,...
Change of the Ministry Name Name of the Ministry of Higher Education has...

பதிப்புரிமை © 2012 உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு. முழுப் பதிப்புரிமையுடையது.

Solution by: