"அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கான விடுதிகள்"
58 வது விடுதி சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களுக்கு 15/02/2017 இல் கையளிக்கப்பட்டது
உயர் கல்வி அமைச்சின் “அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கான விடுதிகள்” என்னும் கருப்பொருளில் 60 பல்கலைக்கழக விடுதிகள் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 58 வது விடுதி சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் 15/02/2017 ம் திகதி உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் திரு.டி.சி. திசாநாயக்க அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது. 104 அறைகளைக் கொண்ட இவ்விடுதி மூலம் 416 மாணவர்கள் தங்குமிட வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இத் திட்டத்திற்காக 220 மில்லியன் ரூபா செலவிடப்பட்டது . இத்திட்டத்தின் 59 வது விடுதி பெராதேனிய பல்கலைக்கழகத்தில் திறக்கப்படவுள்ளதோடு 60 வதும் இறுதியுமான விடுதி ரஜரட்ட பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படவுள்ளது. இதற்கமைய இத்திட்டத்தின் மொத்த பெறுமதி ரூ.12 பில்லியன் . இதன் மூலம் 24,000 மாணவர்களுக்கு தங்குமிட வசதிகளை வழங்க முடியும்.

இந்நிகழ்ச்சித்திட்டத்தின் 2 வது கட்டம் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் திரு . டி.சி. திசாநாயக்க, மேலதிக செயலாளர் திரு. பி.ஜி. ஜயசிங்க, சப்ரகமுவ பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சந்தன உடவத்த, சப்ரகமுவ பல்கலைக்கழக பதிவாளர் திரு. ஹிபதுள் கரீம் ஆகியோர் திறப்பு விழாவின் போது பங்கேற்றமையை படங்களில் காணலாம்.
