site map 1

 

English (UK)SinhalaSriLanka

மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு

newministry slider1

மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு - 2016, 26.05.2016

 

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வட்டியற்ற கடன் திட்டத்தின் கீழ் மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு - 2016

இலங்கை பல்கலைக்கழக வரலாற்றுப் புத்தகத்தில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ஒரு முக்கிய நாள் அண்மையில் அமைந்தது, பல்கலைக்கழக மாணவர்களுக்கு வட்டியற்ற கடன் திட்டத்தின் கீழ் மடிக்கணினிகள் வழங்கும் திட்டமாகும். தோளோடு தோள் இணைந்து, தொழில்நுட்பத்தின் பயணத்தில் போட்டியிட்டு, உலகின் புதிய போக்கைக் கண்டறியவும், நாட்டின் அபிவிருத்திக்காக புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடவும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கவும் மிகப் பொருத்தமானதும் சரியானதுமான இடம் பல்கலைக்கழகம் என்பது எங்களுக்கு துல்லியமாக தெரியும். நாட்டின் அறிவார்ந்த இளைஞர்கள் மத்தியில் தொழில்நுட்ப அறிவை ஆயுத பலமாகக் கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் மிகவும் புத்திகூர்மையுடைய ஒரு குழுவாகும், இவர்களின் சுமையை குறைப்பதற்கான ஒரு மிகப் பெரும் முயற்சியான இந்நிகழ்வு 2016.05.26 ம் திகதி பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமர் கெளரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கெளரவ லக்ஷ்மன் கிரியெல்ல, உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் கெளரவ மொஹான் லால் கிரேரு, அமைச்சின் செயலாளர் திரு டி. சி. திசாநாயக்க, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் மொஹான் டி சில்வா, அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. பி. ஜி. ஜயசிங்க மற்றும் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உட்பட பல சிறப்பு அதிதிகள் கலந்து சிறப்பித்தார்கள்.

மிகப் புதிய செய்திகள்

  • 1
  • 2
State Secretary Assumed Duties Today Mrs. Jayanthi Wijethunga assumed duties on...
மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்வு - 2016,...
Change of the Ministry Name Name of the Ministry of Higher Education has...

பதிப்புரிமை © 2012 உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு. முழுப் பதிப்புரிமையுடையது.

Solution by: